திருப்பெருந்துறை


இறைவர் திருப்பெயர்: ஆத்மநாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி, ஆத்மநாதர்.

இர்ரைவியார் திருப்பெயர்: யோகாம்பாள்.

தல மரம்;குருந்த மரம்.

வழிபட்டோர் : மாணிக்கவாசக சுவாமிகள்.

திருவாசகப் பாடல்கள்: மாணிக்கவாசக சுவாமிகள்.

வரலாறு

உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக - பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் பெருந்துறை எனப் பெயர் பெற்றது.


இன்று மக்களால் ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது.
அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம்.

மாணிக்கவாசகர் அருள் பெற்ற புண்ணிய பூமி. அருபரத்து ஒருவன் குருபரனாக வந்து காட்சித் தந்த பதி. இத்திருக்கோயில், இறைவனின் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லச் செய்த பெருமான் அவ்வாறே நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு சென்றார். அவ்வாறு செய்த இடம் நரிக்குடி என்று இன்று வழங்குகிறது.