ராஜகோபுரம் - முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. நெடிதுயர்ந்த ராஜகோபுரம்; தொலைவில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணை சான்றான ஆத்மநாத ஸ்வரூபத்தின்ஸ்தூல அடையாளம்.
பலர் பலமுறை இந்த ஆலயங்களுக்கு சென்றும் இந்த அற்புத படைப்புகளை ஒரு நிமிடம் நின்று கூட பார்ப்பதில்லை.
பரிமேல் அழகர்கள் ஆதி காலத்தில் இருந்தே வீரர்கள், ஓவியர்கள் மற்றும் சிற்பிகளை ஈர்ப்பதுண்டு. குதிரை சவாரி என்பது வீரத்தின் இருப்பிடமாய் இருக்க, சீறும் குதிரை சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் பல இடங்களில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான்.
வண்ண ஓவியங்களில் ஒன்று 'அண்டரண்ட பட்சி'யின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒருசேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவையாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
வலமாக வரும்போது சுவரில் காணப்படும் வண்ண ஓவியங்கள் மிகப் பழமையானவை; அழிந்த நிலையில் உள்ளன.
அழிந்த நிலையில் திருபெருந்துறை வண்ண ஓவியங்கள் உள்ளன.